கோலி அசத்தல், ஷமி அற்புதம்! 5-ஆம் முறையாக முத்திரை பதித்த இந்தியா




 


ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டிக்கு 5வது முறையாக இந்திய அணி தகுதி பெற்றது.


இதற்கு முன் 2000, 2002, 2013,2017 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. இப்போது 5வது முறையாக தகுதியானது.


துபையில் இன்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.


முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 264 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 265 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 11 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.