இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 35 பேருக்கு காயம்




 


வரகாபொல பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 35 பேர் காயமடைந்து வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.