ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி 3வது முறையாக தகுதி பெற்றுள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி 3வது முறையாக தகுதி பெற்றுள்ளது.
2வது முறை மோதல்
சாம்பியன்ஸ் டிராஃபி ஃபைனலில் இந்திய அணியை 2வது முறையாக நியூசிலாந்து அணி சந்திக்கிறது. ஏற்கெனவே 2000ம் ஆண்டில் நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணியை 2 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நினைவிருக்கும். அதன்பின், 25 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணியை ஃபைனலில் நியூசிலாந்து சந்திக்கிறது.
ஆனால், 2009ம் ஆண்டில் 2வது முறையாக இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்று, ஆஸ்திரேலிய அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இப்போது, 3வது முறையாக சாம்பியன்ஸ் டிராஃபிக்கு தகுதி பெற்றுள்ளது.
7-வது ஐசிசி ஃபைனல்
ஒட்டுமொத்தத்தில் ஐசிசி ஒருநாள் ஃபார்மெட்டில் நியூசிலாந்து அணி பங்கேற்கும் 5வது இறுதிப்போட்டியாகும். ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் 2015, 2019 ஆகிய ஆண்டுகளிலும் சாம்பியன்ஸ் டிராஃபியில் 2000, 2009, 2025 ஆகிய ஆண்டுகளிலும், டி20 உலகக் கோப்பையில் 2021ம் ஆண்டில் இறுதிப்போட்டியிலும், 2021ம் ஆண்டில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் பங்கேற்றது.
நியூசிலாந்து அணி இதுவரை ஐசிசி சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் சாம்பியன்ஸ் டிராஃபியில் 2000-ம் ஆண்டிலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் மட்டும்தான் கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில், 16 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் சாம்பியன்ஸ் டிராஃபி ஃபைனலுக்கு நியூசிலாந்து தகுதி பெற்றுள்ளது.
Post a Comment