நாட்டில் 1881 கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்கள்! இந்த வருடத்திற்குள் நிரப்ப நடவடிக்கை! – சபையில் பொது நிர்வாக அமைச்சர் அபயரத்ன
அவர்களுக்கான பயிற்சிகளை நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சபையில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி சபை மற்றும் தொழில் அமைச்சுகள் மீதான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போது இதனை தெரிவித்த அவர், தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கிராமிய நிர்வாகத்தை பலப்படுத்தும் வகையில் கிராம உத்தியோகத்தர்களின் வெற்றிடங்கள் நிரப்பப்படுவது அவசியமாக உள்ளது.
அந்த வகையில் கிராமத்தின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புள்ள சேவையாற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மூவாயிரம் ரூபா பயிற்சி கொடுப்பனவு இந்த வருடம் முதல் 17,800 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று அவர்களுக்கான உத்தியோகபூர்வ சீருடைக்கான கொடுப்பனவு ஐயாயிரம் ரூபாவிலிருந்து மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டு 15,000 ரூபாவாக வழங்கப்பட்டுள்ளது. அலுவலகத்துக்கான கொடுப்பனவு நூறு வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அது 1500 ரூபாவிலிருந்து 3000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்களது சேவை யாப்பு திருத்தப்பட்டு இந்த ஆண்டு ஜூன் முதலாம் திகதி முதல் அதனை நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
Post a Comment