பாறுக் ஷிஹான்
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட அனைத்து பிரதேசங்களிலும் திண்மக் கழிவுகளை முழுமையாக அகற்றல் மற்றும் கடற்கரை பிரதேசத்தை சுத்தம் செய்யும் விஷேட வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வியாழக்கிழமை(6) நிறைவு பெற்றுள்ளது.
இறுதி நாளான இன்று மருதமுனை மற்றும் பாண்டிருப்பு பிரதேசங்களில் இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. மருதமுனையில் மேற்கொள்ளப்பட்ட கடற்கரை சுத்தப்படுத்தல் பணியில் மக்பூலியா பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் முழுமையாக பங்குபற்றி ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.
செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இனிவரும் நாட்களில் கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையானது வழமை போன்று முன்னெடுக்கப்படும் எனவும் பொது மக்கள் தமது வீடுகளில் அன்றாடம் சேருகின்ற கழிவுகளை சேகரித்து திண்மக்கழிவகற்றல் வாகனங்களில் முறையாக ஒப்படைக்குமாறும் பொது இடங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் கழிவுகளை வீசுவதை முற்றாக தவிர்ந்து கொள்ளுமாறும் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரீ.எம். றாபி கேட்டுக் கொண்டுள்ளார்
Post a Comment
Post a Comment