பாறுக் ஷிஹான்
ரமழான் மாதத்தினை முன்னிட்டு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட ஹோட்டல்கள், பேக்கரிகள், மற்றும் பழக்கடைகளில் இன்று திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தொலைபேசி மூலமான முறைப்பாட்டினைத் தொடர்ந்து அதன் உண்மைத்தன்மையை கண்டறியவும் உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் நோக்கிலும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன் ஆலோசனையின் பிரகாரம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே . மதன் வழிகாட்டலில் மேற்குறித்த இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் பொதுச் சுகாதாரத்துக்கு பொருத்தமான வகையில் உணவு தயாரிப்பது தொடர்பான தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன் தேவையான ஆலோசனைகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்பகுதியில் உள்ள பலசரக்கு வியாபார நிலையங்கள் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினைத் தொடர்ந்து இன்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் உணவு மற்றும் மருந்து பரிசோதகரினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன் போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற காலாவதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்கான முன்னெற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் ரமழான் மாதத்தினை முன்னிட்டு மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய சிரேஸ்ட மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் , உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் இந்நடவடிக்கையில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment
Post a Comment