பாறுக் ஷிஹான்
வட்டிலப்பம், மிக்சர் உற்பத்தி போன்ற சிறு கைத்தொழில் உற்பத்தியாளர்களுக்கு சுகாதார நடைமுறை மற்றும்
உணவுச் சட்டம், சுட்டுத் துண்டிடல், போன்றன தொடர்பாகவும், பிளாஸ்டிக் பாவனையின் பாதிப்பு தொடர்பாகவும் விழிப்புணர்வு நிகழ்வு வெள்ளிக்கிழமை(7) நடை பெற்றது.
மேற்படி நிகழ்வானது சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடை பெற்றது.
மேலும் பிரதேச செயலக பங்களிப்புடன் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத் தலைமையில் நடைபெற்றதுடன் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பிரதேச செயலக சிறு கைத் தொழில் பிரிவு அலுவலர்களும் பங்கு கொண்டனர்.
Post a Comment
Post a Comment