காரைதீவு கிரிக்கெட் துறை வரலாற்றில் மறுமலர்ச்சி!




 



(வி.ரி.சகாதேவராஜா)

 காரைதீவு கிரிக்கெட் துறை  வரலாற்றில் 
தேசிய சுதந்திர தினமன்று இடம் பெற்ற காரைதீவு கிரிக்கெட் கானிவல் ( KCC) விழா கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு அனுசரணையாளராக இருந்ததில் எமது ஒஸ்கார் அமைப்பு பெருமையடைகிறது. நாங்களும் மகிழ்ச்சி அடைகின்றோம். கலந்து கொண்ட மூன்று கழகங்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் .


இவ்வாறு காரைதீவில் நேற்று நடைபெற்ற கிரிக்கெட் கார்னிவல் விழாவிற்கு அனுசரணையாளர்களுள் ஒரு அமைப்பாக திகழ்ந்த அவுஸ்திரேலியா காரைதீவு மக்கள் ஒன்றியம் ( AUSKAR - ஒஸ்கார்)  அமைப்பின் தலைவர் கந்தசாமி பத்மநாதன் (ராஜன் ) வாழ்த்துத் தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்..

கடந்த பல வருடங்களாக எமது ஒஸ்கார் அமைப்பு தாயக தமிழ் மக்களுக்கு பல வழிகளிலே சேவைகளை செய்து வந்துள்ளது. அனர்த்தங்கள் ஏற்படும் நேரத்திலும் ஏனைய ஊர் சார்ந்த ஆன்மீகம் மற்றும் கல்வி செயற்பாடுகளுக்கும் நிறைய உதவி செய்து வந்திருக்கின்றோம். இப்போது காரைதீவின் கிரிக்கெட் துறை மறுமலர்ச்சிக்காக எமது செயலாளர் லாவண்யன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அனுசரணையாளர்களில் ஒருவராக நாங்கள் இணைந்திருந்தோம். இது
 உண்மையிலே எனக்கு பெரும் மகிழ்ச்சியை தருகின்றது .
மூன்று கழகங்கள் பங்குபற்றி இருந்தன.
வெற்றி பெற்ற காரைதீவு விளையாட்டு கழகம் கிங் ஆப் காரைதீவாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மனமார்ந்த வாழ்த்துக்கள்.

முதல் தடவையாக அவுஸ்திரேலியாவிலிருந்து தருவிக்கப்பட்ட இளம் சிவப்பு நிற கடின பந்து இறுதிப் போட்டியில் பயன்படுத்தப்பட்டமையும் மிக்கிமவுஸ் பங்கேற்பும் சிறப்பாக இருந்தது.
இதற்கென அவுஸ்திரேலியாவில் இருந்து எமது போசகர் த.பிரகதீஸ்வரர் மற்றும் செயலாளர் தி.லாவண்யன் ஆகியோர் கலந்து கொண்டமை மகிழ்ச்சி அளிக்கிறது.

அனைவருக்கும் எனது ஒஸ்கார் சார்பிலே மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.

 தொடர்ச்சியாக இவ்வாறான கிரிக்கெட் நிகழ்வுகள் அந்த மண்ணிலே நடைபெற வேண்டும் என்றும் வேண்டுகிறேன்.
என்றார்.