வி.சுகிர்தகுமார்
விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விரிவாக்க நிலையத்தின் வழிகாட்டலில் நெற் செய்கையில் ஒரு ஹெக்டயருக்கு 07 மெற்றிக் தொன் விளைச்சலை அதிகரிக்கும் வேலைத்திட்ட அறுவடை விழா நேற்று (11)நடைபெற்றது.
கிழக்கு விவசாய விரிவாக்க நிலையத்தின் நிலையப்பொறுப்பதிகாரி எம்.எஸ்.எம்.நிப்றாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவிராஜ் கலந்து கொண்டதுடன் விவசாயத் திணைக்கள உதவி விவசாயப் பணிப்பாளர்கள் நெல் பாடவிதான உத்தியோகத்தர் ஏ.ஜ.ஏ பெறோஸ் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்த செயற்திட்டத்தின் கீழ் சேதன அசேதனம் இணைந்த நெற்பயிர்ச்செய்கை முறை பரசூட் முறை மற்றும் நாற்று நடுகை இயந்திரம் போன்ற முறைகள் பயன்படுத்தப்பட்டன.
இச்செயற்திட்டத்தினை பூரணமாக ஆதரித்து எதிர்வரும் போகங்களில் இதனை தொடர்ச்சியாக நடைமுறைபடுத்தவுள்ளதாகவும் விவசாயிகள் கருத்துக்களை தெரிவித்தனர்.

Post a Comment
Post a Comment