#அக்கரைப்பற்று_முஸ்லிம்_மத்திய_கல்லூரி #தேசிய_பாடசாலையின்_வருடாந்த_இல்ல #விளையாட்டு_நிகழ்வுகளின்_உத்தியோக #பூர்வ_அங்குரார்ப்பணம் !!!!!
எமது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வுகள் கடந்த 07/02/2025 வெள்ளிக்கிழமை அன்று அதிபரினால் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்கிணங்க இந்த விளையாட்டு நிகழ்வுகள் அனைத்தையும் திட்டமிட்டு நடாத்தும் விளையாட்டு மத்திய குழுவின் தலைவராக அதிபர் #AL.#நஸீபா (SLPS) அவர்களும் பிரதி தலைவராக நிர்வாகத்திற்கான பிரதி அதிபர் #MA.#ஸலாகுதீன் (SLPS) அவர்களும் விளையாட்டு நிகழ்வுகளின் பணிப்பாளராக இணைப்பாட விதான செயற்பாடுகளுக்கு பொறுப்பான பிரதி அதிபர் #லெப்டினன் #NM.#முஹமட்_ஸாலிஹ் (SLPS) அவர்களும் செயலாளராக உடற்கல்வி ஆசிரியர் #MI.#சிமால்ஐன் ஆகியோரும் செயற்பட உள்ளனர்.
அத்துடன் மூன்று இல்லங்களின் தலைமைப் பொறுப்பாசிரியர்களாக
#AJM. #பைஸல் ,#ALM.#நவாஸ் மற்றும் #சிராஜ் ஆசிரியர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் SDEC செயலாளர் #சபூர்_ஆதம் பழைய மாணவர் சங்க உறுப்பினர் #சட்டத்தரணி_சமீம் மற்றும் SDEC உறுப்பினர். #ஜலால்டீன் உட்பட பழைய மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மற்றும் அன்றைய நாள் இல்லக் கொடிகள் அறிமுகம் செய்யப்பட்டதுடன் இல்லப் பொறுப்பாசிரியர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இவ்வாறான இல்ல விளையாட்டு அறிமுக நிகழ்வு பாடசாலையின் வரலாற்றில் மிக நீண்ட நாட்களின் பின் நடாத்தப்படுகின்ற ஓர் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.
#MCC_MEDIA_UNIT
Post a Comment
Post a Comment