பொதுமக்களுக்கான அறிவித்தல்-சம்மாந்துறை பொலிஸ்




 


பாறுக் ஷிஹான்


கல்முனை நீதிவான்  நீதிமன்ற வளாகத்தில்  இருந்து  தப்பியோடிய சந்தேக நபர் தொடர்பில்   சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு  அறியத்தருமாறு  பொலிசார் பொதுமக்களை கேட்டுள்ளனர்.குறித்த சந்தேக நபர்  ஐஸ் போதைப்பொருள்,  ஆடு  மாடு சட்டவிரோதமாக கடத்தல்,   தங்க நகைகள் தொலைபேசி  திருட்டு,  போன்ற பல்வேறு  சம்பவங்களுடன்   தொடர்புடையவராவார்.

21 வயது மதிக்கத்தக்க "அகில்" என்ற பெயரை உடைய சந்தேக நபர் தொடர்பில் அறிந்தால்   0672 260 222 / 0771319631 ஆகிய இரு தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று கல்முனை நீதிவான்  நீதிமன்ற வளாகத்தில்  இருந்து  தப்பியோடிய சந்தேக நபர் துவிச்சக்கரவண்டி ஊடாக  அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறகர் பகுதிக்கு வருகை தந்து அங்கு  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த (EP-VO-2377) எனும் மோட்டார் சைக்கிளை    திருடி சென்றுள்ளதாக  சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில்  மோட்டார் சைக்கிள் உரிமையாளரினால் இன்றைய தினம் (13) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்குறித்த  முறைப்பாட்டிற்கமைய  சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் ஆலோசனையில்  பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸ்  குழுவினர் மேலதிக  விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

செய்தி பின்னணி


சந்தேக நபர் தப்பியோட்டம் -கல்முனை  நீதிமன்ற வளாகத்தில் சம்பவம்

பாறுக் ஷிஹான்

நீதிமன்றில் வழக்கு நடைபெற்ற வேளை   தப்பி சென்ற சந்தேக நபரை தேடும் பணியில் கல்முனை தலைமையக பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.

இன்று குறித்த சந்தேக நபர்  அம்பாறை மாவட்டம் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக அழைத்து வரப்பட்டு விசாரணையின் பின்னர்   பிணை  வழங்கப்பட்டிருந்தது.இருப்பினும் குறித்த சந்தேக நபருக்கு பிணையாளிகள்  இன்மையினால் நீதிமன்ற உள்ளக வளாகத்தில் உள்ள    சிறை கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

அவ்வேளை குறித்த சந்தேக நபர்  சிறைச்சாலை   அதிகாரிகளிடமிருந்து தப்பி நீதிமன்ற சுவர் மேல் குதித்து தப்பி சென்றதாக நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டில்  குறித்த சந்தேக நபர்    சந்தேகத்தில்     கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தப்பி சென்ற  சந்தேக நபர் சம்மாந்துறை பகுதியை சேர்ந்தவர்  என்பதுடன் சுமார் 21 வயது மதிக்கத்தகக்கவர் என விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.