அமெரிக்காவில் பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்த அதிபர் டிரம்பின் உத்தரவு பல்வேறு சட்ட சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, புலம்பெயர் குடும்பங்கள் நிச்சயமற்ற சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஏறக்குறைய 160 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் 14வது திருத்தம், அமெரிக்காவில் பிறக்கும் எந்தவொரு குழந்தைக்கும் இயல்பாகவே அமெரிக்க குடியுரிமை கிடைப்பதை உறுதி செய்கிறது.
ஆனால், அதிபர் டிரம்பின் உத்தரவு, இந்த 14வது சட்டத் திருத்தத்திற்கு மறுவிளக்கம் அளித்து, சட்டவிரோதமாக அல்லது தற்காலிக விசாவில் அமெரிக்காவில் வாழும் புலம்பெயர்ந்தோரின் குழந்தைகளுக்குக் கிடைக்கும் அமெரிக்க குடியுரிமைக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.
இந்தப் புதிய கொள்கை 19 பிப்ரவரி 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும். அதேபோல் இந்தத் தேதிக்கு முன் பிறக்கும் குழந்தைகளுக்கு இதனால் எந்த பாதிப்புமில்லை.
விளம்பரம்
இந்நிலையில், உலகம் முழுவதும் உள்ள குடியுரிமைச் சட்டங்களுடன் இதை ஒப்பிட்டுக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
உலகெங்கிலும் மனிதாபிமான உதவிகளை செய்து வரும் USAID அமைப்பை டிரம்ப் மூட நினைப்பது ஏன்?
அமலுக்கு வந்த அமெரிக்காவின் வரி விதிப்பு - சீனாவின் பதிலடி என்ன?
கனடா மீதான வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: டிரம்பின் திடீர் மன மாற்றத்துக்கு என்ன காரணம்?
டிரம்ப் அச்சுறுத்தல்: அமெரிக்காவின் கடுமையான வரிகளைத் தவிர்க்க சீனா என்ன செய்கிறது? எப்படி தயாராகிறது?
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை கிடைக்கும் நாடுகள்
பிறந்த இடத்தின் அடிப்படையிலான குடியுரிமை அல்லது ஜூஸ் சோலி (jus soli-பிறந்த மண்ணுக்கான உரிமை) என்பது உலகம் முழுவதும் பின்பற்றப்படும் பொதுவான நடைமுறை அல்ல.
தங்கள் எல்லைகளுக்குள் பிறந்த எவருக்கும் பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்கும் சுமார் 30 நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.
உலகம் முழுவதும் பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை கிடைக்கும் நாடுகள்
ஒரு நாட்டின் எல்லைக்குள் பிறந்த அனைவருக்கும் குடியுரிமை வழங்கும் பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமைக்கு (jus soli) மாறாக, ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் சில நாடுகள் ஜூஸ் சாங்குனிஸ் (லத்தீன் மொழியில் 'ரத்த உறவின் அடிப்படையிலான உரிமை') எனும் கொள்கையைப் பின்பற்றுகின்றன.
அதாவது, குழந்தைகள் பிறந்த இடத்தின் அடிப்படையில் இல்லாமல், அவர்களது பெற்றோரை அடிப்படையாகக் கொண்டு, தங்களது குடியுரிமையைப் பெறுகிறார்கள்.
மற்ற நாடுகளின் குடியுரிமைச் சட்டம், இந்த இரண்டு கொள்கைகளின் அடிப்படையிலும் அமைந்துள்ளது. மேலும் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களின் குழந்தைகளுக்கு அந்த நாடுகள் குடியுரிமை வழங்குகின்றன.
கனடா, சீனாவுக்கு எதிரான டிரம்பின் முடிவால் அமெரிக்காவுக்கு என்ன இழப்பு ஏற்படும்? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
3 பிப்ரவரி 2025
இலங்கை சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அறிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்
3 பிப்ரவரி 2025
பிறந்த இடத்தின் அடிப்படையிலான குடியுரிமைபட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,பிறந்த இடத்தின் அடிப்படையிலான குடியுரிமை என்பது உலகம் முழுவதும் பின்பற்றப்படும் பொதுவான நடைமுறை அல்ல
சான் டியாகோவில் அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் சமூகவியல் பேராசிரியரான ஜான் ஸ்க்ரென்ட்னி, பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமை அல்லது ஜூஸ் சோலி, அமெரிக்கா முழுவதும் பொதுவானது என்றாலும், "ஒவ்வொரு தேசமும்- மாநிலமும் அதன் தனித்துவமான பாதையைக் கொண்டுள்ளது" என்று நம்புகிறார்.
"உதாரணமாக, சில நாடுகள் பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ஏற்றுக் கொள்ளும்போது, அடிமைகளும் முன்னாள் அடிமைகளும் குடியுரிமை பெறலாம் என்பதை ஏற்றுக்கொண்டனர். ஆனால் சில நாடுகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த வரலாறு சிக்கலானது" என்கிறார் அவர்.
மேலும், விடுதலை செய்யப்பட்ட அடிமைகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கும் வகையில், அமெரிக்காவில், 14வது திருத்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று விளக்குகிறார்.
இருப்பினும், பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ஏற்றுக் கொண்ட பெரும்பாலான நாடுகள் பொதுவான ஓர் அம்சத்தைப் பகிர்ந்து கொள்கின்றன.
"முன்னாளில் காலனிய நாடுகளாக இருந்து, பின்னர் தேசிய-அரசுகளாக தங்களை நிலைநிறுத்திக்கொள்வது" தான் அந்த நாடுகளுக்கு இடையில் காணப்படும் பொதுக்கூறு என ஸ்க்ரென்ட்னி விவரிக்கிறார்.
"அவர்கள் யாரைச் சேர்க்க வேண்டும், யாரை விலக்க வேண்டும், மற்றும் தேசிய அரசை எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என்பது குறித்து ராஜதந்திரமாக செயல்பட வேண்டியிருந்தது" என்று அவர் விவரிக்கிறார்.
"பல நாடுகளில், தங்கள் நாட்டில் பிறந்த எவருக்கும் குடியுரிமை வழங்குவது அவர்களின் தேசத்தைக் கட்டியெழுப்ப உதவும் ஒரு நடைமுறை உத்தியாக இருந்தது. ஒரு நிலையான மற்றும் ஒருங்கிணைந்த நாட்டை உருவாக்கும் அவர்களின் இலக்குகளுக்கு இது உதவியது" என்றும் குறிப்பிடுகிறார்.
"சில நாடுகளில், பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமை ஐரோப்பியர்களின் குடியேற்றத்தை ஊக்குவித்தது. மற்ற நாடுகளில், பழங்குடியின மக்கள், முன்னாளில் அடிமைகளாக இருந்தவர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் நிரந்தர குடிமக்களாகச் சேர்க்கப்படுவதையும் உறுதி செய்தது. இந்த அணுகுமுறை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஏற்றதாக இருந்தது. ஆனால் அந்த காலம் மாறியிருக்கலாம்" என்றும் கூறுகிறார்.
டொனால்ட் டிரம்ப் ஆவணங்கள் இல்லாத புலம்பெயர்ந்தோரை எங்கு அடைத்து வைக்க திட்டமிட்டுள்ளார்?
2 பிப்ரவரி 2025
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான டிரம்பின் நட்பு இந்த ஆட்சியில் தொடருமா? சவால்கள் என்ன?
31 ஜனவரி 2025
கொள்கை மாற்றங்கள் மற்றும் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்
இந்தியக் குடியுரிமை பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,டிசம்பர் 2004 முதல், இந்தியாவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோர் இருவரும் இந்தியராக இருந்தால் மட்டுமே குழந்தைக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும்
சமீபத்திய ஆண்டுகளில், சில நாடுகள் தங்கள் குடியுரிமைச் சட்டங்களை மாற்றியமைத்துள்ளன. பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையைக் கடுமையாக்கியுள்ளன அல்லது ரத்து செய்துள்ளன.
குடியேற்றத்தையும், தங்களது தேசிய அடையாளத்தைப் பாதுகாப்பதிலும் அந்த நாடுகள் கவனமாக உள்ளன.
மேலும் வேறொரு நாட்டைச் சேர்ந்த மக்கள், குழந்தைகளைப் பிரசவிப்பதற்காகவே மற்றொரு நாட்டிற்கு வருகை தரும் நடைமுறையான "பிறப்பு சுற்றுலா" எனும் நடைமுறை குறித்தும் கவனித்து தங்களது சட்டங்களைக் கடுமையாக்கியுள்ளார்கள்.
உதாரணமாக, இந்தியா ஒருமுறை தன் மண்ணில் பிறந்த அனைவருக்கும் பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்கியது. ஆனால் காலப்போக்கில், சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக வங்கதேசத்தில் இருந்து எழுந்த கவலைகள், கட்டுப்பாடுகளுக்கு வழிவகுத்தது.
டிசம்பர் 2004ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோர் இருவரும் இந்தியராக இருந்தால் மட்டுமே குழந்தைக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும் அல்லது குழந்தையின் பெற்றோரில் ஒருவர் இந்திய குடியுரிமை பெற்று, மற்றவர் சட்டவிரோதமாக குடியேறியவராகக் கருதப்படாவிட்டால் மட்டுமே அவர்களின் குழந்தைக்கும் இந்திய குடியுரிமை கிடைக்கும்.
பல ஆப்பிரிக்க நாடுகள் காலனித்துவ காலத்தில் தங்கள் நாட்டில் பிறந்த எவருக்கும் (jus soli) பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்கின. இருப்பினும், சுதந்திரம் பெற்ற பிறகு, இந்த நாடுகளில் பெரும்பாலானவை தங்கள் சட்டங்களை மாற்றிக்கொண்டன.
அமெரிக்கா: பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை தடை செய்ய முயலும் டிரம்ப் - பிற நாடுகளில் என்ன நிலை?பட மூலாதாரம்,Getty Images
இப்போது, ஒரு குழந்தை அந்த நாட்டின் குடியுரிமையைப் பெற வேண்டுமெனில், குறைந்தபட்சம் அதன் ஒரு பெற்றோராவது, அந்நாட்டின் குடியுரிமை பெற்றவராகவோ, அல்லது நிரந்தரமாக அங்கு வசிப்பவராகவோ இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளன.
சீனா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் காணப்படுவது போல, பெரும்பாலான ஆசிய நாடுகளில் குடியுரிமை பெறுவதற்கு கட்டுப்பாடுகள் உள்ளன. அந்த நாடுகளில், குடியுரிமை பெறுபவரின் வம்சாவளியை முதன்மையாகக் கொண்டு அது தீர்மானிக்கப்படுகிறது.
ஐரோப்பாவிலும் குடியுரிமைச் சட்டங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்தப் பிராந்தியத்தில், பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை (ஜூஸ் சோலியை) அனுமதித்த கடைசி நாடு அயர்லாந்துதான்.
ஒரு குழந்தை குடியுரிமை பெற குறைந்தபட்சம் ஒரு பெற்றோராவது அந்த நாட்டின் குடியுரிமை கொண்டவராக, நிரந்தரமாக அங்கு வசிப்பவராக அல்லது சட்டப்பூர்வ அனுமதி பெற்று, அங்கு தற்காலிகமாக குடியிருக்க வேண்டும் என்று புதிய திருத்தம் குறிப்பிடுகிறது.
ஆனால், ஜூன் 2024இல், 79 சதவீத வாக்காளர்கள் இந்தக் கொள்கையை மாற்றுவதற்கான அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்தனர்.
மேலும், தங்கள் குழந்தைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பாஸ்போர்ட் கிடைக்க வேண்டும் என்பதற்காக, வெளிநாட்டுப் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள அயர்லாந்துக்கு வருவதால் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று அரசாங்கம் கூறியது.
தமிழ் - ஜப்பானிய மொழிகள் இடையே இவ்வளவு ஒற்றுமையா? விளக்கும் மொழியியல் வல்லுநர்கள்
2 பிப்ரவரி 2025
ராஜீவ் காந்தி ஓட்டிய விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முயன்றது ஏன்? ரா உளவு அமைப்பு தடுத்தது எப்படி?
3 பிப்ரவரி 2025
டொமினிகன் குடியரசில் மிகவும் கடுமையான மாற்றம் ஒன்று ஏற்பட்டதுபட மூலாதாரம்,Reuters
படக்குறிப்பு,கடந்த 1929 முதல் பிறந்த அனைவருக்கும், புதிய குடியுரிமை விதி பொருந்தும் என்று டொமினிகன் குடியரசின் உச்சநீதிமன்றம், 2013ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது
அதேபோல், டொமினிகன் குடியரசில் மிகவும் கடுமையான மாற்றம் ஒன்று ஏற்பட்டது. 2010ஆம் ஆண்டில், குடியுரிமை சார்ந்து ஒரு அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டது. இதன் விளைவாக, ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகள், குடியுரிமை பெறுவதில் இருந்து விலக்கப்பட்டனர்,
கடந்த 1929 முதல் பிறந்த அனைவருக்கும், புதிய குடியுரிமை விதி பொருந்தும் என்று டொமினிகன் குடியரசின் உச்சநீதிமன்றம், 2013ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது.
இதனால், பல்லாயிரக்கணக்கான மக்கள், பெரும்பாலும் ஹைட்டியன் வம்சாவளியினர், டொமினிகன் குடியுரிமையை இழந்துள்ளனர். இவர்களில் பலரிடம் ஹைட்டியன் ஆவணங்களும் இல்லை.
எனவே அவர்களுக்கு எந்த நாட்டின் குடியுரிமையும் கிடைக்காமல் போகலாம் என உரிமைக் குழுக்கள் எச்சரித்தன. இந்த நடவடிக்கையை சர்வதேச மனித உரிமை அமைப்புகள், மனித உரிமை வழக்குகளைக் கையாளும் அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச நீதிமன்றம் ஆகியவை கடுமையாகக் கண்டித்தன.
பொதுமக்களுடைய எதிர்ப்பின் காரணமாக, டொமினிகன் குடியரசு 2014இல் ஒரு சட்டத்தை இயற்றியது. இதன் மூலம், டொமினிகன் நாட்டில் பிறந்த புலம்பெயர்ந்தோரின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கு, குறிப்பாக ஹைட்டிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக இந்தச் சட்டம் உதவுகிறது.
ஸ்க்ரென்ட்னி இதை உலகளாவிய மாற்றங்களின் ஒரு பகுதியாகப் பார்க்கிறார்.
"இப்போதெல்லாம், வெகுஜன இடப்பெயர்வு மற்றும் எளிதான போக்குவரத்தின் மூலம், நீண்ட தூரம் கடல் வழியாகக்கூட பயணிக்க முடியும். இதன் காரணமாக, எந்த நாட்டின் குடியுரிமை பெற விரும்புகிறார்கள் என்பது குறித்தும் மக்கள் சில உத்திகளைக் கொண்டிருக்க முடியும். அதனால்தான் தற்போது அமெரிக்காவில் குடியுரிமை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது," என்கிறார்.
ஸ்வீடனில் குர்ஆனை எரித்த இராக்கியர் சுட்டுக் கொலை - வெளிநாட்டு சக்திகளுக்கு தொடர்பு உள்ளதா?
படக்குறிப்பு,அதிபர் டிரம்பின் நிர்வாக உத்தரவு ஏற்கெனவே சட்ட சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது
அதிபர் டிரம்ப், குடியுரிமை குறித்து ஆணை பிறப்பித்த சில மணிநேரங்களுக்குள், ஜனநாயகக் கட்சி தலைமையிலான 22 மாநிலங்கள், சான் பிரான்சிஸ்கோ நகரம், கொலம்பியா மாவட்டம், சிவில் உரிமைக் குழுக்கள் ஆகியவை அவரது நடவடிக்கையை எதிர்த்து கூட்டாட்சி அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தன.
டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற நான்காவது நாளில், அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜான் கோகெனோர் புதிய குடியுரிமைக் கொள்கை "முற்றிலும் அரசியலமைப்புக்கு எதிரானது" என்று கூறி தற்காலிகமாகத் தடை செய்தார்.
மேலும், அதிபர் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவின் மூலம் பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை முடிவுக்குக் கொண்டு வர முடியாது என்பதைப் பெரும்பாலான சட்ட அறிஞர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.
"அவர் அதிகளவு மக்களை வருத்தமடையச் செய்யும் ஒரு காரியத்தைச் செய்கிறார். ஆனால் இறுதியில் இதுகுறித்து நீதிமன்றமே தீர்மானிக்கும்" என்று அரசியலமைப்பு நிபுணரும் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் சட்டத் துறைப் பேராசிரியருமான சாய்கிருஷ்ண பிரகாஷ் கூறினார்.
மேலும் "இது அவர் சொந்தமாக முடிவு செய்யக்கூடிய விஷயம் அல்ல" என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதிபர் டிரம்பின் நிர்வாக உத்தரவு அரசியலமைப்பில் ஏற்கெனவே உள்ள திருத்தத்தை மறு விளக்கம் செய்கிறது. இந்தத் திருத்தத்தை மாற்ற, பிரதிநிதிகள் சபை, செனட் ஆகிய இரண்டிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகள் தேவை, அதனோடு சேர்த்து பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்க மாகாணங்களின் ஒப்புதலும் தேவை.
இந்நிலையில், சட்ட நடவடிக்கைகள் தொடரும் நிலையில் அதிபரின் உத்தரவு தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும், கூட்டாட்சி அரசின் வழக்கறிஞர்கள் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், இறுதியில் இந்த வழக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
Post a Comment
Post a Comment