அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இருந்து நியூயோர்க் நகருக்கு ஜோர்ஜ் புஷ் இன்டர்காண்டினென்டல் விமான நிலையத்திலிருந்து புறப்படத்தயாரான யுனைடெட் எயார்லைன்ஸ் விமானத்தில் தீப்பிடித்ததால் பரபரப்பான சூழல் உருவானது.
விமானம் புறப்படத் தயாரான போது அதன் இறக்கைகளில் ஒன்றில் இருந்து தீப்பிழம்புகள் வெளியேறின. இதையடுத்து விமானம்தொடர்ந்து பயணத்தை மேற்கொள்வது இரத்துச் செய்யப்பட்டது. மேலும், விமானம் ஓடுபாதையில் இருந்து வெளியேற்றப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக ஹூஸ்டன் தீயணைப்புத் துறை தனது எக்ஸ் தள பதிவில்,
"விமான நிலையத்திலிருந்து புறப்படத்தயாரான விமானம் ஓடுபாதையிலிருந்து வெளியேறுவதற்கு முன் பிரச்சினை ஏற்பட்டதாகத் தகவல்கிடைத்ததையடுத்து , ஹூஸ்டன் தீயணைப்புத் துறையின் விமான நிலைய மீட்பு தீயணைப்பு வீரர்கள் களத்திற்கு விரைந்து சென்று, விமானத்தில் இருந்தவர்களை உடனடியாக வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை," என்று தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வார காலத்திற்குள் அமெரிக்காவில் மட்டும் இரண்டு விமான விபத்துகள் இடம்பெற்ற நிலையில், இந்தச் சம்பவம் விமானத்தில் இருந்த பயணிகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.குறித்த விமானத்தில் 104 பயணிகள் மற்றும் 5 பணியாளர்களும் பயணம்செய்ய இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment