(பாறுக் ஷிஹான்)
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியில் பாரிய தண்ணீர் தாங்கி ஒன்று இன்று(26) மாலை கரை ஒதுங்கியுள்ளது.
கடலில் நிலவும் கடும் காற்றால் குறித்த பாரிய தண்ணீர் தாங்கி கரையொதுங்கி இருக்கலாம் என்று தெரிவிக்கப்படும் அதேவேளை அதிகாரிகளுக்கும் தெரியபடுத்தப்பட்டுள்ளது.
குறித்த பாரிய தண்ணீர் தாங்கி இரும்பு உலோகத்தில் செய்யப்பட்டு அதன்மேல் பைரினால் வார்க்கப்பட்டு இளம் பச்சைக் வர்ண கூம்பக வடிவில் அடைக்கப்பட்டதாக இப்பொருள் பெரிய அளவில் காணப்படுகின்றது.
இப்பொருளின் மேற்பகுதியில் டயர்கள் காணப்படுகின்றன. இது பெரிய கப்பல்களின் ஒரு பாகமாக இருக்கலாம் என அப்பகுதி சில மீனவர்கள் தெரிவிப்பதோடு இவ்வாறு மர்மப் பொருள் கரை ஒதுங்கியுள்ளமை தொடர்பில் கடற்படைக்கு தாம் அறிவித்துள்ளதாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கடந்த சில வாரங்களாக கிழக்கு மாகாண கடற்கரை பகுதிகளில் மர்மான பொருட்கள் மற்றும் ஆளில்லாத படகுகள்இ டொல்பீன்கள் போன்றவை கரை ஒதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
கரை ஒதுங்கிய மிதவையை இராணுவம் கடற்படை பொது மக்கள் என பலர் பார்வையிட்டு வருகின்றனர்.இது தொடர்பாக கடற்படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கரை ஒதுங்கிய மிதவையை இராணுவம் கடற்படை பொது மக்கள் என பலர் பார்வையிட்டு வருகின்றனர்.இது தொடர்பாக கடற்படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment