Rep/ஜே.கே.யதுர்ஷன்
ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று இடம்பெற்றது....
அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதேச செயலாளர் திரு.திரவிஜராஜ் அவர்களின் ஏற்பாட்டில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் கௌரவ ஜனாப் A.ஆதம்பாவா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது....
இன் நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ.திரு.மஞ்சுள ரத்நாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌர திரு.கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோரும் தேசிய மக்கள் சக்தியின் கரையோர பிரதேச இணைப்பாளர் திரு.ரவீந்திர பிரதேச செயலக உதவிச்செயலாளர் R.சபாகர் மற்றும் கணக்காளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோத்தர்கள் முப்படையினர் திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் பொது அமைப்புக்களின் தலைவர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரேத்தியக செயலாளர்கள் என்பலரும் இவ் கூட்டத்தில் கலந்து கொண்டனர்...
மேலும் இக்கூட்டத்தில் கலந்த காலங்களின் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி கூட்டகளில் எடுக்கப்பட்ட தீர்மானகள் இடம்பெற்றுள்ளதா என குறித்த அதிகாரிகளிடம் ஆராயப்பட்டது...
மற்றும் கண்ணகீ புரம் கவடாப்பிட்டி ஆகிய பகுதிகளின் யானை வேலி அமைப்பது பற்று கலந்துரையாடப்பட்டதுடன் கவடாப்பிட்டி குடிநீர் பிரச்சினை பற்றியும் ஆராயப்பட்டதுடன் . விரைவில் இதற்கான தீர்வுகள் கிடைக்கப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது...
Post a Comment
Post a Comment