கிளின் சிறிலங்கா செயற்றிட்டம் பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில்



 


வி.சுகிர்தகுமார்  


  கிளின் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்துடன் ஒருங்கிணைந்த பாடசாலை மட்ட வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் அம்பாரை மாவட்டத்தின் முதலாவது செயற்றிட்டம் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் இன்று(20) முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் த.இந்திரன் தலைமையில் அக்கரைப்பற்று இராணுவமுகாம் 241 ஆம் காலாட் படைப்பிவின் கட்;டளை அதிகாரி கேணல் சுகத் திசாநாயக்காவின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளர் ஆர்.உதயகுமார் இலங்கை காப்புறுதிக்கூட்டுத்தாபன பிராந்திய முகாமையாளர் சஜீவ் பொது மக்கள் தொடர்பாடல் அதிகாரி மேஜர் சுபசிங்க வலயக்கல்வி அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் இராணுவ அதிகாரிகள் கிராம உத்தியோகத்தர் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
வருகை தந்த அதிதிகளுக்கு பாடசாலை மாணவர்கள் பெரும் வரவேற்பளித்தனர்.  இதன் பின்னராக தேசிய கொடியினை பிரதேச செயலாளர் ஏற்றி வைக்க பாடசாலைக்கொடியினை வலயக்கல்விப்பணிப்பாளர் ஏற்றினார்.
தொடர்ந்து தேசிய கீதமும் கிளின் சிறிலங்கா கீதமும் இசைக்கப்பட்டதுடன் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பிலும் பாடசாலை மட்டத்தில் இடம்பெறும் முதலாவது நிகழ்வு இது எனவும் அதிதிகள் உரையாற்றினர்.
இதன் பின்னராக சிரமதான வேலைத்திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் இராணுவத்தினர் பெற்றோர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

3 attachments • Scanned by Gmail