நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது கமு/கமு/மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய அதிபராக அதிபர் சேவை ஒன்றை சேர்ந்த எம்.சி. நஸ்லின் றிப்கா அன்ஸார் அவர்கள் இன்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் கடிதத்தின் பிரகாரம் மீண்டும் பெறுப்பேற்றார்.
சாய்ந்தமருது கமு/கமு/ மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய புதிய அதிபராக நியமிக்கப்பட்ட அதிபர் சேவை ஒன்றை சேர்ந்த எம்.சி. நஸ்லின் றிப்கா அன்சார் அவர்கள் இன்று பாடசாலை பிரதி அதிபர் இடமிருந்து சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரியும், கல்முனை கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளருமான ஏ. அஸ்மா மலிக் முன்னிலையில் பாடசாலையில் கடமையேற்றார்.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம். சாஹிர், கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல்.எம். அன்ஸார், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை அம்பாறை மாவட்ட முன்னாள் தலைவர் எஸ்.எச். ஆதம்பாவா, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.ஆர்.எம். அன்ஸார், சாய்ந்தமருது முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி, சாய்ந்தமருது கமு/கமு/அல்- ஹிலால் வித்தியாலய அதிபர் யூ.எல். நஸார், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு முன்னாள் உறுப்பினர் யூ.எல்.என். ஹுதா, சாய்ந்தமருது கமு/கமு/அல்- ஹிலால் வித்தியாலய பிரதி அதிபர், உதவி அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் பொறியியலாளர் கமால் நிஷாத், கமு/கமு/ மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய பிரதி அதிபர், ஆசிரியர்கள், கமு/கமு/ மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment