நூருல் ஹுதா உமர்
மனித அபிவிருத்தி தாபனம், காரைதீவு பிரதேச செயலகத்துடன் இணைந்து பாதுகாப்பான புலம்பெயர் தொழில் (வெளிநாட்டு வேலை) தொடர்பான நடமாடும் சேவை காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜீ. அருணன் தலைமையில் காரைதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது
இந்த நடமாடும் சேவைக்கு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்ததுடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.ஏ.அஸிஸ், கல்முனை சட்ட உதவி ஆணைக்குழு சட்ட உத்தியோகத்தர் வீ.ரீ.ஹசினா, காரைதீவு உதவி பிரதேச செயலாளர் எஸ். பார்த்திபன், மனித அபிவிருத்தி தாபன உதவி இணைப்பாளர் எம். ஐ. றியால் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அம்பாறை மாவட்ட காரியாலய அதிகாரிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டு நடமாடும் சேவைக்கு வருகை தந்த பொதுமக்களுக்கு பாதுகாப்பான புலம்பெயர் தொழில் தொடர்பான பிரச்சனைகளுக்கான தீர்வுகளும், ஆலோசனைகளும், வழிகாட்டல்களும் வழங்கியதுடன் முறைப்பாடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது.
Post a Comment
Post a Comment