இறக்காமம் றோயல் கனிஷ்ட கல்லூரியில்




 


(வி.ரி சகாதேவராஜா)


இறக்காமம் றோயல் கனிஷ்ட கல்லூரியில் 5ம் தர புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் "மகத்துவம் விழா" அதிபர் எம் .பஜீர் தலமையில் சிறப்பாக நடைபெற்றது .

பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் எஸ். மகேந்திரகுமார் கலந்து சிறப்பித்தார்.

 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டது. 

அத்துடன், இறக்காமம் கோட்டத்தில் அதிகூடிய   25 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமை இந்த கல்லூரியில் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்விற்கு, சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் எஸ். மகேந்திரகுமார், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்வை.யாசீர் அறபாத், இறக்காமம் கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம். மகுமூதுலெவ்வை இணைப்பாளர் எஸ்எல்.நிஷார், வளவாளர் எஸ்எல்.எ.முனாப்,  பிரதி அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.