கனடாவில் விமான விபத்து




 


கனடாவில் உள்ள டொராண்டோ விமான நிலையத்தில் தரையிறங்கும் போது டெல்டா எயார்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. ஓடுபாதையில் சறுக்கி தலைகீழாக அந்த விமானம் கவிழ்ந்தது. 


விமானத்தில் இருந்த 80 பேரில் யாரும் உயிரிழக்கவில்லை, ஆனால் 18 பேர் காயமடைந்தனர். அவர்களில் 3 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். அந்த விமானம் அமெரிக்காவின் மினியாபோலிஸில் இருந்து மினசோட்டாவுக்கு வந்தது. 


அதிக காற்று மற்றும் பனிப்புயல் இந்த விபத்துக்கு காரணமென சொல்லப்படுகிறது.