நீதி,சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரைமப்பு அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் SEDR நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் பாடசாலை மாணவர்களுக்கான மத்தியஸ்தம் தொடர்பான மூன்று நாள் பயிற்சி செயலமர்வு கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
பாடசாலை மத்தியஸ்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நீதி அமைச்சினால் இணைக்கப்பட்டுள்ள மத்தியஸ்த உத்தியோகத்தர் மாஜிதா ஒருங்கிணைப்பில் கடந்த பெப்ரவரி மாதம் 3, 5, 6, ஆம் திகதிகள் பயிற்சி செயலமர்வானது நடைபெற்று 3 நாட்களுடன் நிறைவுற்றது.
இப்பயிற்சி செயலமர்வின் இறுதிநாள் நிகழ்வில் பாடசாலை அதிபர் எம்.ஐ. ஜாபீர்(SLEAS) உட்பட பிரதி அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டதுடன் வளவாளர்களாக நீதி அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.முஹமட் அஜுன் , ஏ.எல் றினோசா சக உத்தியோகத்தர்களாக அருள் பிரசாந்தன் மற்றும் பாறுக் ஷிஹான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பயிற்சி செயலமர்வின் மூலம் மாணவர்கள் மத்தியஸ்தம் தொடர்பில் முரண்பாடுகளை தீர்ப்பது தொடர்பாகவும் பயிற்சி வழங்கப்பட்டதுடன் எதிர்கால மாணவ சமுதாயம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் தொடர்பாகவும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.அத்துடன் பாடசாலை மத்தியஸ்தம், மத்தியஸ்த வரலாறு ,முரண்பாடு ,முரண்பாட்டு தீர்வின் முக்கியத்துவம், தொடர்பாடல், கலந்துரையாடல், மத்தியஸ்த படிமுறைகள், பாடசாலை மத்தியஸ்தத்தில் மாணவர்களின் பங்கு ,என்பன தெளிவூட்டப்பட்டன

Post a Comment
Post a Comment