திடீர் மின்வெட்டை சரிசெய்ய நேரமாகும் -மின்சார சபை






நாடு முழுவதும் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இது குறித்து இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் வினவியபோது, நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருவதாகவும், அதற்கான காரணம் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.


குறித்த திடீர் மின்வெட்டை சரிசெய்ய 4 முதல் 6 மணி நேரம் ஆகுமென மின்சார சபை வட்டாரங்கள்

 தெரிவித்துள்ளன.