(சுகிர்தகுமார்)
77ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் அம்பாரை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலகத்தில்; பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்றன.
இடம்பெற்ற நிகழ்வுகளில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் கணக்காளர் க.பிரகஸ்பதி உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் நிருவாக உத்தியோகத்தர் க.சோபிதா தலைமைப்பீட முகாமையாளர் கே.நேசராஜா கிராம நிருவாக அலுவலர் பரிமளவாணி உள்ளிட்ட அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தேசிய கொடியேற்றல் மற்றும் தேசிய கீதம் இசைத்தல் ஆகிவற்றோடு ஆரம்பமான சுதந்திர நிகழ்வில்; சமய அனுஸ்டானம் இடம்பெற்றதுடன் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த இராணுவ வீரர்கள் உள்ளிட்டவர்களை நினைவு கூரப்பட்டது.
பின்னர் பிரதேச செயலாளரின் உரையும் இடம்பெற்றது.
இறுதியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு; மரநடுகையும் ஆரம்பிக்கப்பட்டதுடன் சுதந்திர தினத்தை முன்னிட்டு அலுவலக உத்தியோகத்தர்களினால் வழங்கப்பட்ட உணவுப்பொதிகளை சிறுவர் இல்லங்கள் மற்றும் வருமானம் குறைந்த மக்களுக்கு வழங்கும் நடவடிக்கை பிரதேச செயலாளர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

Post a Comment
Post a Comment