சாய்ந்தமருதில் அம்பாறை மாவட்ட சமுர்த்தி சிறுவர் கழகங்களின் ஒன்றுகூடல்.
நூருல் ஹுதா உமர்
நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்ட சமுர்த்தி சிறுவர் கழகங்களின் மாபெரும் ஒன்று கூடலும் தேசிய சுதந்திர தின நிகழ்வும் (04) செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது பெளசி கடற்கரை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது .
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம், அம்பாறை மாவட்ட சமுர்த்திக் காரியாலயம் மற்றும் சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி சங்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் றியாத் ஏ.மஜீத் மற்றும் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபர் ஆகியோரின் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
விசேட அதிதியாக கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசார், கெளரவ அதிதிகளாக சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முவாபிக்கா, சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன், மாவட்ட சமுர்த்தி முகாமையாளர்களான பி.எம்.ரஞ்சனி, எச்.எல்.ஜெயரத்ன, சாய்ந்தமருது, நிந்தவூர் சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர்களான ஏ.சீ.ஏ. நஜீம், ஏ.சீ. அன்வர் உள்ளிட்ட சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் மாவட்டத்தின் 20 பிரதேச செயலகங்களிலிருந்து 400க்கும் மேற்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் சிறுவர்களின் பங்குபற்றலுடன் கலை, கலாச்சார, பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
எதிர்கால சந்ததியினர் களுக்கிடையில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே நிகழ்வின் நோக்கமாகும்
Post a Comment
Post a Comment