வில்லூரான் ஜே.கே.யதுர்ஷன்/SukirthaKumar
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச சபையினால் LDSP - PT2 எனும் நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக உலக வங்கியின் நிதி அனுசனையுடன் திருக்கோவில் பிரதேசத்திற்குட்பட்ட தம்பிலுவில் பகுதியில் சிறுவர்களின் பொழுது போக்கு அம்ஷங்களுடன் சிறுவர் பூங்கா மற்றும் விநாயகபுரம் பகுதியில் விவசாயிகளின் நலன் கருதி நெல் உலர்ந்துதல் ,நெல் சுத்திகரிதல் நிலையம் என்பன நேற்றைய தினம் கிழக்கு மகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஜனாப் L.M அஸ்மீ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.....
குறித்த நெல் சுத்திகரிக்கும் இயந்திரமானது இலங்கையில் முதல் முறையாக எரி பொருள் சிக்கனமுடையதும் கொரிய தொழிநுட்ப தயாரிப்புமான குறித்த இயந்திரம் திருக்கோவில் பிரதேச சபைக்கு கிடைக்க பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்...
இன் நிகழ்வானது திருக்கோவில் பிரதேச சபை தம்பிலுவில் செயலாளர் திருமதி ஜெயந்தி வீரபத்திரன் அம்மனி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.. .
மேலும் குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபையின் உதவி ஆணையாளர் ஜனாப் A.S.M .அஷீம் மற்றும் HayIes நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைமை முகாமையாளார் திரு.P.ஜினிதன் மற்றும் பிரதேச சபை உத்தியோத்தர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்....
கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபை ஆணையாளர் உரை நிகழ்த்தையில் குறித்த வளங்கள் எமது பிரதேசத்தின் சொத்து இதனை நாம் பாதுகாக்க வேண்டும் என்பதுடன் அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் பிரதேச சபைகளின் இச் சபை அபிவிருத்தி திட்டகளில் முன் உதாரணமாக விளங்கிறது எனவும் அவர்தெரிவித்தது குறிப்பிடத்தக்கது .
Post a Comment
Post a Comment