Rep/ எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்.
காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் தற்போது காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெறுகின்றது.
பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் கூட்டத்தில் ஆராயப்படுகின்றன.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், காத்தான்குடி தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரான எம்.பி.எம் .பிர்தௌஸ் நளீமி, பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத் உட்பட நகசபை செயலாளர் ரிப்கா சபீன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யூ.எல்.எம்.என். முபீன் மற்றும் திணைக்கள பிரதேச தலைவர்கள், பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
Post a Comment
Post a Comment