(எம்.என்.எம்.அப்ராஸ்)
IPHS Campus (ஐ.பி.எச்.எஸ் கெம்பஸ்)மற்றும் NIST Campus (என்.ஐ.எஸ்.டி கெம்பஸ்) இன் பட்டமளிப்பு விழா மிக கோலாகலமாக நடைபெற்றது. கட்டிட நிர்மாணத்துறையின் முன்னணி கல்வி நிறுவனங்களான IPHS Campus (ஐ.பி.எச்.எஸ் கெம்பஸ்)மற்றும் NIST Campus(என்.ஐ.எஸ்.டி கெம்பஸ்) இணைந்து கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் வருடாந்த பட்டமளிப்பு விழா வெகு விமர்சையாக நேற்று முன்தினம்(25)நடைபெற்றது.
இவ் விழாவிற்கு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி பொறியியலாளர் என்.ரீ.ஹமீட் அலி தலைமையில் இடம் பெற்றது. பிரதம அதிதியாக பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ஷாணிகா ஹிரிம்புரகம கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் கௌரவ அதிதியாக இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் முஜாஹித் ஹிலால் மற்றும் விசேட அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைத் தலைவர் கலாநிதி எம்.ஐ.எம்.சீத்திக் உட்பட பெற்றார்கள்,விரிவுரையாளர்கள், நிர்வாக அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் கணிய அளவீடு உயர் தேசிய டிப்ளோமா (Higher National Diploma in Quantity Surveying), மற்றும் டிப்ளோமா (Diploma in Quantity Surveying), சிவில் இன்ஜினியரிங் (Civil Engineering), எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் (Electrical and Electronic Engineering), மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (Mechanical Engineering) மற்றும் டிப்ளோமா இன் கட் அண்ட் பி.எஸ் (Diploma in CAD and BS) போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்ற சுமார் 150 மாணவர்கள் பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.
Post a Comment