பாதணிகள் வழங்கி வைப்பு






 பாறுக் ஷிஹான்

 
கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்துக்குமான சபை (KDMC) யின் ஏற்பாட்டில்   சனிக்கிழமை (01) வசதி குறைந்த 80 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலைக்கான பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டன.

கல்முனை மையோன் மாவத்தையில் அமைந்துள்ள மையோன் ப்ளாஷா திருமண மண்டபத்தில் கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்துக்குமான சபையின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி யு.எம். நிசார்   தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ரி.எம்.எம். அன்சார்  பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

அத்துடன்  அமைப்பின் செயலாளர் ஏ.எல்.ஏ.மஜீட் , உப தலைவர் மௌலவி இசட்.எம். நதிர் , பொருளாளர் எம்.ரி.எம். நயீம்,  கணக்காய்வாளர் ஏ.எம்.எம். முஸ்தக்கீம்,  உதவிச் செயலாளர் எஸ்.எம். ஹாஜா ஆகியோர் உள்ளிட்ட அமைப்பின் உயர்பீட உறுப்பினர்கள் பாடசாலை அதிபர்கள்  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும்  இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.