( வி.ரி. சகாதேவராஜா)
மண்முனை தென் எருவில்பற்று ( களுவாஞ்சிக்குடி) பிரதேச செயலாளராக கடமையேற உருத்திரன் உதயஸ்ரீதர் இன்று (3) திங்கட்கிழமை கடமையேற்றார்.
காரைதீவைச் சேர்ந்த உ.உதயசிறிதர் காத்தான்குடி பிரதேச செயலாளராக கடந்த பல வருடங்களாக சேவையாற்றியிருந்தார்.
அங்கிருந்து இடமாற்றம் பெற்று இன்று இங்கு கடமையை பொறுப்பேற்றார்.
உதவி பிரதேச செயலாளர்,
பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் அவரை வரவேற்றனர்.
இதேவேளை இங்கு பிரதேச செயலாளராக இருந்த திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் இடமாற்றம் பெற்று மண்முனை வடக்கு பிரதேச செயலாளராக இன்று பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment