திருக்கோவில் ஆதார வைத்திய சாலைக்கு ஒரு தொகை வைத்திய உபகரணங்கள் வழங்கி வைப்பு....
ஜே.கே.யதுர்ஷன்..
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு அவுஸ்ரேலியா வன்னி கோப் அமைப்பு மற்றும் வைத்திய உளநல சேவையினர் ஆகியவற்றின் 30லட்சம் ரூபாய் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது....
குறித்த நிகழ்வானது ஆதாரவைத்திசாலை வளாகத்தில் திருக்கோவில் ஆதாரவைத்திய சாலை வைத்திய அத்தியட்சகர் ஜனாப் Dr.A.மசூத் அவர்களின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் இடம்பெற்றது ....
இவ் நிகழ்வில் வன்னிக்கோப் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ரஞ்சன் சிவஞானசுத்தரம் மற்றும் மட்டு அம்பாறை இணைப்பாளர் K.தர்மராஜ் மற்றும் முன்னாள் பொத்துவில் பிரதேச சபை உப தவிசாளர் திரு.பார்த்திபன் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் தாதி உத்தியோத்தர்கள் வைத்தியர்கள் நலன் விரும்பிகள் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்....
Post a Comment