"சுக வனிதையர் கிளினிக்"







 நூருல் ஹுதா உமர்


சுக வனிதையர் கிளினிக்கில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு சிறந்த அடைவுகளை பெற்றுக்கொண்ட அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த பொது சுகாதார மருத்துவ மாதுக்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு (03) அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.முனவ்வர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர், பிராந்திய தாய் சேய் நலன் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.றிஸ்பின், அக்கரைப்பற்று மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், உயிரியல் மருத்துவ பொறியியலாளர் என்.எம்.இப்ஹாம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.