( வி.ரி.சகாதேவராஜா)
இலங்கை தமிழரசி கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் இன்று (1) சனிக்கிழமை யாழ்ப்பாணம் சென்று
முன்னாள் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மறைந்த சோமசுந்தரம் சேனாதிராஜா( மாவை சேனாதிராஜா) அவர்களின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையிலான குழுவினர், அமரர் மாவையின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் திருமதி சேனாதிராஜா மகன் கலையமுதன் உள்ளிட்ட குடும்ப உறவுகளை சந்தித்து அனுதாபங்களைத் தெரிவித்தனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனையும் சந்தித்து அளவளாவினர்.
அங்கு முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ..
கட்சியை சின்னாபின்னமாக்க சில சக்திகள் இயங்குவதை விரும்பாத உன்னத தலைவர் மாவை.
அவர்களுக்கு இவரது மரணம் பாடமாக அமையும். இனியாவது ஒருமித்து பயணிக்க வேண்டும்.
அவர்கள் பிழை விட்டிருந்தால் அவர்கள் சார்பில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
அம்பாறை மாவட்டத்தையும், அம்பாறை தமிழர்களையும் நேசித்த ஒரு பெரும் தலைவர் மாவை அவர்கள். இலங்கை தமிழரசு கட்சியின் இருக்கக்கூடிய அம்பாறை மாவட்டத்தை நன்கு தெரிந்த துணிச்சல் மிக்க பேச்சாளர் .அவருடைய இழப்பு வடகிழக்கு தமிழர்களுக்கு மாத்திரமல்ல உலகத்தில் வாழ்கின்ற தமிழர்களுக்கு பேரிழப்பாக கருதுகிறேன்.
இலங்கைத் தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவரும் தமிழ் தேசியப் பாதையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில் இருந்து ஜனநாயக ரீதியாக எமது மக்களுக்காக தன்னால் இயன்ற செயல்பாடுகளை இளவயதிலிருந்து பல சிறைவசம் சென்று தலையில் பட்ட அடியின் வேதனையை ஒவ்வொரு பிரச்சார மேடையிலும் கூறிக் கொள்வார் .
அந்த அடியின் தாக்கமே இன்று அவர் உயிரே பிரிய காரணம்.
அவரைப்போன்று ஒரு பொதுநலம் உள்ள ஒரு தலைவரை இனி இலங்கை தமிழரசு கட்சியில் காண முடியுமா? பதவிக்காக பறக்கின்றவர்கள் மத்தியில் தமிழ் இனத்திற்காக உங்கள் வாழ்நாள் அனைத்தையும் அர்ப்பணித்த பெருந்தலைவர் சம்மந்தர் ஐயா வழியிலே பயணித்த நீங்கள் இன்று அவரிடத்திலே சென்று விட்டீர்கள் .
உலகத்தில் தமிழ் தேசிய வாதிகளை உலுக்கிய மிகப்பெரும் துக்க நாளாக கருத முடிகின்றது .
Post a Comment
Post a Comment