அமெரிக்கா: வெடித்துச் சிதறிய விமானம், குழந்தை நோயாளியுடன் சென்றபோது விபரீதம்






1.2.2925

 அமெரிக்காவின் வட கிழக்கு, ஃபிலடெல்ஃபியாவில் சிறிய விமானம் ஒன்று கட்டடங்களின் மீது மோதி வெடித்துச் சிதறியுள்ளது. இந்த விபத்தில் வீடுகள், வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. விமானம் மோதியதில் தரையில் இருந்தவர்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

உள்ளூர் நேரப்படி, வெள்ளிக்கிழமை மாலை இந்த விமான விபத்து நிகழ்ந்தது. அந்த விமானத்தில் பலர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்பு மற்றும் அவசரக்கால குழுவினர் மாலை உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து, விபத்து நடந்த இடத்திலிருந்து பொதுமக்கள் விலகிச் செல்ல வலியுறுத்தினர்.

இந்த விபத்துக்கான காரணம், விமானத்தில் இருந்தவர்கள் யார், அவர்களில் எத்தனை பேர் உயிர் பிழைத்துள்ளார்கள் என்பன போன்ற விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.