தென்கிழக்கு பல்கலைகழகத்தில் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!




 


நூருல் ஹுதா உமர்


"தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்" என்ற கருப்பொருளின் கீழ் நாட்டின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நாடுமுழுவதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இன்றைய தினம், 2025.02.04 இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம், முஸ்தபா, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீட பீடாதிபதி அஷ்ஷெய்க் எம்.எச்.ஏ. முனாஸ், மற்றும் மாணவர்கள் நலன்புரி சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.எல்.எம். ஐயூப்கான், பல்கலைக்கழக வேலை பகுதியின் பொறியலாளர் எம்.எஸ்.எம்.பஸில், பிரதம பாதுகாப்பு அதிகாரி ஏ.எம்.ஜாபிர், சட்டம் மற்றும் ஆவணங்கள் பிரிவின் சிரேஷ்ட உதவி பதிவாளர் ஏ.ஆர்.எம். சுல்பி, விரிவுரையாளர்கள், நிர்வாக மற்றும் கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின்போது மர நடுகையும் இடம்பெற்ற அதேவேளை பல்கலைக்கழக பாதுகாப்பு தரப்பினரின்  அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றது.