அல். ஹிக்மா முஸ்லிம் வித்தியாலயத்தின் 77வது சுதந்திரதின விழா
சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட நாவிதன்வெளி சாளம்பைக்கேணி அல். ஹிக்மா முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபர் எம். ரீ.அப்துல் சத்தார் தலைமையில் 77வது சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வுக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பின் கிழக்கு மாகாண சட்டப் பணிப்பாளர் சட்டத்தரணி சீ. எம்.ஹலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன்சுதந்திர தினத்தை முன்னிட்டு தரம் ஒன்று மாணவர்களுக்கு பிரதம அதிதினால் புத்தகப் பைகளும், கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
பாடசாலை மேம்பாட்டு இணைப்பாளர் ஏ. எச். எம். சவாகிர், அல். கரீம் பவுண்டேஷன் செயலாளர் யூ. எல். எம். பாயீஸ் மற்றும் அகில இலங்கை இளஞ்ர் பேரவையின் தலைவர் றுமைஸ் முஹம்மட் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
Post a Comment
Post a Comment