அலிக்கம்மை கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 5 வீடுகள் இன்று திறப்பு




 



.சுகிர்தகுமார்  

 அரசாங்கம் வீடற்றவர்களுக்கான வீடுகளை அமைத்துக்கொடுக்கும் பணியை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.
இதற்கமைவாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதியில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் அலிக்கம்மை கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 5 வீடுகள் இன்று (20)திறந்து வைக்கப்பட்டன.
மீள்குடியேற்ற அமைச்சின் வீடமைப்பு திட்டத்தின் கீழ் 10 இலட்சம் பெறுமதியில் அமைக்கப்பட்;ட 5 வீடுகளே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டன.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீடுகளை திறந்து வைத்ததுடன் நிகழ்வில் அளிக்கம்பை தேவாலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை எஸ்.ஜெகநாதன் மற்றும் அருட்சகோதரன் அஜந்தன் குலாஸ் கிராம உத்தியோகத்தர் நிதர்சன் அபிவிருத்தி உத்தியோகத்தர் வினோ சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் விஜயபாலா உள்ளிட்ட கிராமத்தலைவர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
ஆராதனை வழிபாடுகளை பங்குத்தந்தை அருட்தந்தை எஸ்.ஜெகநாதன் மற்றும் அருட்சகோதரன் அஜந்தன் குலாஸ் ஆகியோர் நடாத்தி வைத்தனர்.
இதன் பின்னராக வீடுகளை பிரதேச செயலாளரோடு இணைந்து ஏனைய அதிதிகளும் வீடுகளை திறந்து வைத்தனர். தொடர்ந்து வீட்டு உரிமையாளர்களிடம் இறுதி நிதி பெறுவதற்கான உத்தரவு பத்திரங்களையும் கையளித்தனர்.
அளிக்கம்பை பிரிவு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் பின்தங்கிய பிரதேசமாக கருதப்படுவதுடன் பல்வேறு தேவைப்பாடுகளும் பூர்த்தி செய்யபட வேண்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.