விரதத்தின் பயன்களைஅறிவியல் ஆய்வுகளின் மூலம் கண்டுபிடித்ததற்கு ,Yoshinori Ohsumi க்கு 2016 இல் நோபல் பரிசு




 



விரதத்தின் பயன்களை அறிவியல் ஆய்வுகளின் மூலம் கண்டுபிடித்ததற்கு ஜப்பானை சேர்ந்த செல் உயிரியலார்  Yoshinori Ohsumi  க்கு 2016 இல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.


விரதம் இருக்கும் நேரத்தில் நமது செல்களே நமது உடலை சுத்தம் செய்யும், பலவீனமான, நோய்வாய்ப்பட்ட செல்களை உண்டு அழிக்கும். புற்றுநோய் செல்களை நீக்கும். பல நோய்கள் உருவாக காரணமாக உள்ள செல்களை நீக்கும் ( Autophagy )...


தொடர்ச்சியாக 12 மணி நேரத்திற்கு மேல் விரதம்  இருந்தால் இந்த நல்ல விஷயங்கள் எல்லாம் நமது உடலில் படிப்படியாக விரத நேரம் கூட கூட நடக்கும் ...

( மிக முக்கிய குறிப்பு : விரதம் என்றால் டிபன் ஐட்டம் சாப்பிடுவது இல்ல, தண்ணீர் மட்டும் தான் குடிக்கலாம் ... ). நான் இடையிடை விரதம் ( Intermittent Fasting ) 16:8 இருந்து வருகிறேன் ... 


எடுத்துக்காட்டாக,  நாம் அடிக்கடி சாப்பிட்டுக் கொண்டிருந்தால் நமது உடல் செரிப்பதிலேயே தான் அதிக ஆற்றலை செலவிடும், கவனம் செலுத்தும்.  சாப்பிடாமல் விரதம் இருக்கும் போது, நமக்கு எப்படி ஓய்வு கிடைக்கும் போது அல்லது நேரம் கிடைக்கும் போது வீட்டை, இடத்தை சுத்தம் செய்கிறோமோ, அதே போல விரதம் இருக்கும் போது நமது உடல் அதன் சக்தியை சுத்தம் செய்ய பயன்படுத்தும். செல்லின் தற்கொலை பைகள் என்று அழைக்கப்படும் லைசோசோம் தன்னை மாய்த்து இந்த வேலையை செய்யும்.  விலங்குகளை பாருங்கள் நோய்வாய்பட்டால் எதையுமே சாப்பிடாது. ஆனால் நாம் அப்படி இல்லை ...


விரதம் இருப்பதை அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன ...