அக்கரைப்பற்றிலும் #CleanSriLanka முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும்!




 


அண்மையில் பெய்த அடைமழையினால் வடிகானுக்குள் சேர்ந்த பிளாஸ்டிக் கழிவுகளும் இதிலடங்குகின்றன. நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இடம், அக்கரைப்பற்று -கலமுனை பிரதான வீதி, மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அண்மையிலுள்ள பகுதி இது.

வடிகான்கள் மழைகாலத்திற்கு முன்னர் சுத்திகரிப்புச் செய்யப்படவில்லை. இதனால், பிரதான வீதியும் அதனை அண்டிய பகுதியும் ஈ ஏனைய வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியிருந்ததால்,மக்கள் பலத்த சிரமங்களை எதிர் கொண்டிருந்தனர்.

இது சம்மந்தமாக,அக்கரைப்பற்று பிரதான வீதியினைச் சேர்ந்த வர்த்தகர்கள் உரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் வந்திருந்தனர்.ஆனால்,பலன் கிட்டவில்லை.

இன்றைய தினம், அக்கரைப்பற்று எலன்ஸ் ரேட் உரிமையாளர்,இது தொடர்பான கோரிக்கையை தேசிய மக்கள் சக்தி அக்கரைப்பற்று அமைப்பாளர் றமிஸிடம் வேண்டியிருந்தார். அதன் பயனாக, RDA அதிகாரிகள் குழுவினர், குறித்த இடத்தில் வடிகான்களைத்  தோண்டிய போது வந்து குவிந்த பிளாஸ்ரிக் கழிவுகள் இவை. 

இத்துடன் மாத்திரம் நிறுத்தாறு, ஆலையவேம்பு பிரதேச சபை,அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட  வடிகான்பகுதிகள், துப்புரவு செய்யப்பட வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாகும்.

L