மட்டு - கல்லடி பகுதியில் உருக்குலைந்த நிலையில் பொதுசுகாதார பரிசோதகரின் சடலம் மீட்பு





KalKudaNation Rep

மட்டக்களப்பு - கல்லடி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு நேற்று (15) மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கல்லடியைச் சேர்ந்த 48 வயதான பொதுசுகாதார பரிசோதகர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் அப்பகுதியிலேயே வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.