மாளிகைக்காடு செய்தியாளர்
கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தில் முதலாம் தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும், ஏடு துவக்கமுமான வித்தியாரம்ப விழா இன்று (30) பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் பாடசாலை வளாகத்தில் விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலய பிரதம பொறியியலாளர் ஏ.எம். சாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கல்முனை வலய கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் எஸ்.எம்.எம்.அன்ஸார், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபை முன்னாள் உறுப்பினர் யூ.எல். நூருல் ஹுதா, வர்த்தகர் ஏ.அப்துல் கையூம், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் முஹம்மட் ராபி, முன்னாள் செயலாளர் ரௌபி பிர்தௌஸ், பாடசாலை பிரதியாதிபர் எஸ்.எம். சுஜான், உதவி அதிபர் எம். முஹம்மட் ஹாதிம், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
தரம் இரண்டு மாணவர்கள் தரம் ஒன்று மாணவர்களை அன்பளிப்புக்கள் வழங்கி வரவேற்ற இந்நிகழ்வில் பாடசாலை முன்னெடுத்துள்ள கல்வி அபிவிருத்தி மற்றும் கல்வி மேம்பாடுகள், கல்வி அடைவுகள் பற்றியும் சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய அதிபர், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவைகள் தொடர்பிலும் அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலய பிரதம பொறியியலாளர் ஏ.எம். சாஹீர், அல்- மீஸான் பௌண்டஷன் தவிசாளரும், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபை முன்னாள் உறுப்பினருமான யூ.எல். நூருல் ஹுதா ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினர்.
புதிதாக இன்று கல்வி வாழ்வை ஆரம்பித்துள்ள மாணவர்களை அதிதிகளும், பாடசாலை சமூகமும் மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.
Post a Comment
Post a Comment