🔴டாக்டர் மர்யம் பின் லாடன்.. சவூதி அரேபியாவின் தொழில் முறை நீச்சல் வீராங்கனை






 🔴டாக்டர் மர்யம் பின் லாடன்..

சவூதி அரேபியாவின் தொழில் முறை நீச்சல் வீராங்கனை.


கடல் வழியாக சவூதி அரேபியாவின் அல் கோபாரிலிருந்து பஹ்ரைன் வரை 11 மணித்தியாலம் 25 நிமிடம் 47 செக்கன்கள் தொடர்ச்சியாக நீந்தி சத்தமில்லாமல் சாதனை படைத்திருக்கிறார்.


புற்று நோயாளிகளுக்கு நிதி திரட்டும் முகமாக 2014ம் ஆண்டு மர்யம் பஹ்ரைனில் இருந்து சவூதி அரேபியாவிற்கு 42 கிலோமீற்றர் தூரம் கடல் வழியாக நீச்சல் செய்து வந்திருந்தார்.


2016ம் ஆண்டு 34 கிலோ மீற்றர்கள் நீந்தி ஆங்கில கால்வாயை கடந்திருந்தார்.


2017ம் ஆண்டு 24 கிலோமீற்றர்கள் நீந்தி டுபாய் கிரீக்கை கடந்திருந்தார்.


2022ல் செங்கடலை கடந்து எகிப்தை அடைந்திருந்தார்.


இவை எல்லாவற்றையும் நிகழ்த்திக்காட்டிய முதல் அரேபிய பெண் மர்யம்தான்.