மாகாண சபை தேர்தலை விரைவில் நடாத்த சட்டத்திருத்தங்கள்




 


மாகாண சபை தேர்தலை விரைவில் நடாத்துவதற்கான சட்டத்திருத்தங்கள் முன்னெடுக்கப்படுவதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சு தெரிவிக்கின்றது.

2016 ஆம் ஆண்டு 17ஆம் இலக்க மாகாண சபை சட்டத்தின் கலப்பு தேர்தல் முறையின் கீழ் மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு பாராளுமன்ற அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன கூறினார்.

அதனை நடைமுறைப்படுத்துவற்கு எல்லை நிர்ணயம் தொடர்பிலான ஆணைக்குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்ற போதிலும் அந்த அறிக்கை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.

தற்போதைய சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தலை கடந்த கால முறைமையிலேயே மீண்டும் நடாத்துவது தொடர்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

1988ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தின் விதிமுறைகளுக்கு அமையவே பழைய முறைப்படி மாகாண சபைத் தேர்தலை நடாத்த வேண்டும்.

இதற்கமைய விரைவில் அமைச்சரவையில் மகஜர் சமர்ப்பிக்கப்படும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சர்  தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலை ஆகஸ்ட் மாதம் நடாத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மேலும் கூறினார்.