# திருடப்பட்ட மாட்டிறைச்சி உட்பட ஆயுதங்களுடன் கைதான சந்தேக நபரிடம் விசாரணை




 



பாறுக் ஷிஹான்


திருடிய மாட்டினை இறைச்சியாக்கிய  சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட வளத்தாப்பிட்டி பகுதியில் இன்று (21)  அதிகாலை  இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது திருடப்பட்ட  மாட்டினை இறைச்சியாக்கிய  சந்தேக நபர் உட்பட வெட்டுவதற்கு  பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸார் மீட்டனர்.
 
அத்துடன் மேற்குறித்த பகுதியில்  மேய்ச்சலுக்கு சென்ற ஏழு மாத மாட்டு  கன்று காணவில்லை என தெரிவித்து  இன்று   உரிமையாளரினால் பொலிஸில்  முறைப்பாடு  செய்யபப்ட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய   தேடுதலை மேற்கொண்ட பொலிஸார் அப்பகுதி  வீடு ஒன்றில்   மாட்டை அறுத்து இறைச்சியாக்கும் போது   மாட்டிறைச்சியுடன்   சந்தேக நபரை  கைது செய்ததுடன் மாடு  வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் மீட்டனர்.

மேலும்  கைதான 32 வயது  சந்தேக நபரிடம் இருந்து 47 கிலோ 600 கிராம் மாட்டிறைச்சி மீட்கப்பட்டதுடன்  சந்தேக நபர் மற்றும் மாடு  வெட்ட பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சம்மாந்துறை  நீதிவான் நீதிமன்றில்   சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இச் சம்பவம் தொடர்பில் கைதான வளத்தாப்பிட்டி பகுதியை சேர்ந்த  32 வயதுடைய சந்தேக நபர்  பொலிஸாரின் துரித  நடவடிக்கையில்  திருட்டுச் சம்பவம் நடைபெற்று ஒரு மணித்தியாலயத்தில்  கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது தவிர குறித்த சோதனை நடவடிக்கையானது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபரின் ஆலோசனையில்  பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு  பொலிஸ்  குழு  ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.