காரைதீவு இளம் பெண் சட்டத்தரணி டிறுக்ஷா தம்பிராஜா சட்ட முதுமானியானார்




 



( வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவைச் சேர்ந்த இளம் பெண் சட்டத்தரணி செல்வி.டிறுக்ஷா தம்பிராஜா சட்டமுதுமானிப் பட்டம் பெற்றார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட பீடத்தில் பயின்ற அவருக்கான சட்ட முதுமாணி பட்டமளிப்பு விழா அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

ஓய்வு நிலை முகாமைத்துவ உதவியாளர் தம்பிராஜா மற்றும் ஓய்வு நிலை அதிபர் கலைவாணி தம்பதியினரின் புதல்வி டிறுக்ஷா  என்பது குறுப்பிடத்தக்கது