அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைக்கு பிராந்திய பணிப்பாளர் விஜயம் : அபிவிருத்திக் குழுவினரையும் சந்திப்பு




 



நூருல் ஹுதா உமர்


அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான கூட்டமொன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர், அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டொக்டர் எம்.ஐ.ஏ.நசீர் உள்ளிட்ட வைத்தியர்கள், வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

வைத்தியசாலையின் தற்போதைய தேவைகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலை திட்டங்கள் தொடர்பாக கேட்டறிந்து கொண்ட பணிப்பாளர் வைத்தியசாலையின் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்து தருவதாகவும் இதன்போது உறுதியளித்தார்.