2025 ஆண்டின் முதலாவது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் திருக்கோவில் பிரதேசத்தில்....!!!
ஜே.கே.யதுர்ஷன்
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற புதிய அரசின் 2025 ஆண்டின் முதலாவது பிரதேச அபிவிருத்தி குழு கூட்டமானது திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் அவர்களின் ஏற்பாட்டில் பிரதேச அபிவிருத்தி குழுத்தலைவர்.ஜனாப்.A.ஆதம்பாவா (தேசிய மக்கள் சக்தி )அவர்களின் தலைமையில் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தல் இடம்பெற்றது....
இந் நிகழ்வில் திருக்கோவில் பிரதேசத்தில் காணப்படும் அபிவிருத்தி செய்யப்பட விடயங்கள் பற்றியும் பிரதேசத்தில் மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளின் தேவைகள், பற்றாக்குறைகள் பற்றியும் ஆராயப்பட்டதுடன் 2023 ஆண்டு இடம்பெற்ற அபிவிருத்தி ஒருகிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்குரிய நடவடிக்கைகள் வேலைதிட்டங்கள் இடம்பெற்றுள்ளதா என்பது பற்றி திணைக்கள அதிகாரிகள் ஊடாக ஆராயப்பட்டது....
மேலும் திருக்கோவில் பிரதேசத்தில் காணப்படும் அபிவருத்தி செய்யப்படாத பாதைகள் ,உள்ளூர் வீதிகள் மற்றும் வடிகான்கள் ,கட்டாக்காலி மாடுகளின் பிரச்சினை மற்றும் யானை வேலி ,கடலரிப்பு போன்ற பிரதேசத்தில் காணப்படும் பிரச்சினைகள் திணைக்களங்களின் தேவைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் அதற்கான தீர்வும் வழங்கப்பட்டது.....
எதிர்காலத்தில் வரவு செலவு திட்டங்கள் ஊடாக திருக்கோவில் பிரதேச அபிவிருத்திக்கு நிதி வழங்குவத்தற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது....!!!
மேலும் இவ் நிகழ்வில் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் திருமதி S.நிருபா, உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திரு.திருமதி அனோஜா உஷாந் , நிர்வாக உத்தியோத்தர் திருமதி.மங்களா திருக்கோவில் பிரதேச சபை செயலாளர் திருமதி ஜெயந்திவீரபத்திரன்
திருக்கோவில் பிரதேச செயலக கணக்காளர் ஜனாப் ALM .றிபாஸ் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஜனாப் A.L.M.மசூத் திருக்கோவில் சுகாதார அதிகாரி (MOH).Dr.P.மோகனகாந்தன் திருக்கோவில் பிரதேச செயலக கிராமசேவையாளர்களுக்கான நிர்வாக உத்தியோத்தர் திரு.கந்தசாமி மாகாண நீர்பாசண திணைக்களத்தின் திருக்கோவில் பிரதேச பொறியலாளர் ராஜேஸ்கண்ணா மற்றும் முப்படையினர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச இணைப்பாளர்கள் திணைக்களங்களின் அதிகாரிகள் பொது அமைப்புகளின் தலைவர்கள் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரேத்தியக செயலாளர்கள் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையின் உத்தியோத்தர்கள் கிராம சேவை உத்தியோத்தர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்...
Post a Comment
Post a Comment