கல்முனை பிராந்திய மலேரியா தடுப்பு பிரிவின் வருடாந்த ஒன்றுகூடல்




 


நூருல் ஹுதா உமர்


கல்முனை பிராந்திய மலேரியா தடை இயக்க பிரிவின் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடையும் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வும் சனிக்கிழமை (18) சம்மாந்துறை தனியார் நிறுவனமொன்றில் இடம்பெற்றது.

மலேரியா தடுப்பு இயக்க பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஐ.எம்.கபீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்கள் பிரதம அதிதியாகவும், பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர் அவர்கள் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

மிக நீண்ட காலமாக பிராந்திய மலேரியா தடை இயக்கப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியாக கடமையாற்றி சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரியாக இடமாற்றம் பெற்றுச் சென்ற டாக்டர் எம்.எம்.நௌஷாத் இந்நிகழ்வின் போது பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பிராந்திய மலேரியா தடை இயக்க பிரிவில் மிக நீண்ட காலமாக தெளிகருவி இயக்குனராக பணியாற்றி அரச சேவையிலிருந்து  ஓய்வு பெற்றுச் செல்லும் திரு. எஸ்.விமலேந்திரன் இதன்போது பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன் பாடசாலைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்திய மலேரியா தடை இயக்கப் பிரிவின் நலன்புரி சங்க உறுப்பினர்கள் உடைய பிள்ளைகளும் இந்நிகழ்வின் போது அதிதிகளினால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்ட மை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் ஓய்வுபெற்ற மேற்பார்வை பொது சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர் எம்.ஐ.அப்துல் சமட் மற்றும் மலேரியா தடை இயக்க பிரிவின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.