மருதமுனை செய்தியாளர் - றாஸிக் நபாயிஸ்
தமிழன், ஒருவன் உட்பட பல வாராந்த பத்திரிகைகளுக்கும், தினசரி பத்திரிகைகளுக்கும் ஆய்வு மற்றும் புலனாய்வு கட்டுரைகளை எழுதி வருபவரும், பிராந்திய ஊடகவியலாளருமான நூருல் ஹுதா உமர் சிலோன் மீடியா போரத்தின் ஐந்தாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு "இலங்கை நிர்வாக சேவை உயரதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடலும் கௌரவிப்பும்" நிகழ்வில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 15 வருடங்களுக்கு மேலாக சிறந்த பிராந்திய ஊடகவியலாளராகவும், 150க்கும் மேற்பட்ட ஆய்வு மற்றும் புலனாய்வு கட்டுரைகளை எழுதி பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுத்தவரும், ஊடக தர்மத்தை நிலைநாட்ட நீதிமன்றம் மற்றும் பல விசாரணைகளை சந்தித்தவருமான, அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளர் நூருல் ஹுதா உமரின் ஊடக மற்றும் சமூக சேவைகளை பாராட்டி இந்த கௌரவம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மேல் நீதிமன்ற நீதிபதி அல்-ஹாபிழ் என்.எம்.அப்துல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் வி.ஜெகதீசன் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு கௌரவித்தனர்.
Post a Comment
Post a Comment