இலவச தஜ்வீத் குர்ஆன் வழங்கும் நிகழ்வு




 


பாறுக் ஷிஹான்


தாறுஸ்ஸபா அமையத்தின் ஏற்பாட்டில் தாறுஸ்ஸபா குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கான இலவச குர்ஆன் பிரதிகளை வழங்கும் நிகழ்வு  வியாழக்கிழமை(30) மாலை கல்முனை தாறுஸ்ஸபா தலைமையகத்தில் உஸ்தாத் சபா முஹம்மத் நஜாஹி தலைமையில் நடைபெற்றது.

இதன் போது கல்முனை பிரதேச பதில் பிரதேச செயலாளர் ரி.எம்.எம். அன்சார் (எல்.எல்.பி) பிரதம அதிதியாகவும் கௌரவ அதிதியாக கல்முனை பிரதேச செயலக சமுக சேவைகள் அதிகாரி எம்.எம்.எம். ஜெய்சான் ,கல்முனைக்குடி 09 பிரிவு கிராம சேவகர் எம்.ஏ . றஹ்னா ,அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.றிப்கா ஜெஸ்மின், ஆகியோர் வருகை தந்ததுடன் மாணவர்களுக்கான குர்ஆன் பிரதிகளையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
--