(கனகராசா சரவணன்)
நீரில் மூழ்கி உயிரிழந்த குழந்தையின் மரணவீட்டிற்கு சென்று கிணற்றில் குளித்து கொண்டிருந்த குடும்பஸதர் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழப்பு – வெல்லாவெளியில் சம்பவம் --
(கனகராசா சரவணன்;)
மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ்பிரிவிலுள்ள தும்பங்கேணி பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றின் கிணற்றில் குளிக்கும்போது தவறி கிணற்றுக்குள் வீழந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
வெல்லாவெளி தும்பங்கேணி கிராமத்தை சேர்ந்த 50 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான தங்கராசா பரமானந்தம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சம்பவதினமான இன்று காலையில் நேற்றைய தினம் நீர்நிலையில் வீழ்ந்து உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தையின் மரண வீட்டுக்கு சென்று வீடுதீரம்பிய நிலையில் கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தபோதே கிணற்றுக்குள் தவறி வீழ்ந்துள்ளதையடுத்து அவரை உறவினர்கள் அப்பகுதி மக்களின் உதவியுடன் மீடடெடுத்து பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதில் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.
இதேவேளை அந்த பகுதியிலுள்ள வாய்காலில் வீழ்ந்து நீரில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை ஒன்று நேற்றைய தினம் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
Post a Comment
Post a Comment